Home கனடா கனடாவில் பெரும்பான்மையானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற விருப்பம்

கனடாவில் பெரும்பான்மையானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற விருப்பம்

by Jey

கடனாவில் பெரும்பான்மையானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில்  Nanos ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கு பற்றியவர்களில் 69 வீதமானவர்கள் பூஸ்டர் தடுப்பூசி ஒன்றை ஏற்றிக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் 55 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 55 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 76 வீதமானவர்கள் இந்த பூஸ்டர் ஊசிகளை ஏற்றிக்கொள்ள தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

18 முதல் 34 வயது வரையிலான இளம் தலைமுறையினர் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் அதிக நாட்டம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

related posts