கனேடியர்களில் 86 வீதமானவர்கள் காற்று மாசான பகுதிகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் வளி மாசடைதல் குறித்த குறிகாட்டிகளுக்கு அமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வளி மாசடைந்த சூழ்நிலையில் வாழ்வது அவர்களது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நைட்ரிஜன் டயக்ஸோடைட் உள்ளிட்ட சில பொருட்கள் வளியில் அதிகளவில் செறிந்திருப்பது ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வளி மாசடைதல் தொடர்பில் இதனை விடவும் கூடுதலான கரிசை கொள்ள வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தல் வழங்கியள்ளனர்.