Home கனடா ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கத் தயார்

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கத் தயார்

by Jey

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்கத் தயார் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனேடிய அதிகாரிகள், தலிபான் பிரதிநிதிகளுடன் கட்டாரில் சந்திப்பு ஒன்றை நடாத்தியுள்ளனர்.

கனேடிய ராஜதந்திரிகள் மற்றும் மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கட்டாரில் தாலிபான்களை சந்தித்துள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்க உதவிகை வழங்கத் தயார் என கனடா தெரிவித்துள்ளது.

எனினும் நேரடியாக தலிபான்களிடம் பணமோ பொருளோ கொடுக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக இந்த உதவி வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் கனேடிய படையினருடன் இணைந்து செயற்பட்ட ஆப்கான் பிரஜைகளை கனடாவிற்குள் அழைத்து வருவது குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

related posts