கனடாவில் கோவிட் நான்காம் அலையின் தாக்கம் குறைகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார வழிகாட்டல்கள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் நோய்த் தொற்றாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது நாட்டில் கோவிட் பரவுகை நிலைமை பேணப்பட்டால், புதிய நோய்த் தொற்றாளர் எண்ணிக்கையைய குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
சில பிராந்தியங்களில் நிலைமை திருப்திகரமாக இல்லை என்ற போதிலும் ஒட்டுமொத்தமாக கோவிட் நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் நோய்த் தொற்று பரவுகை அதிகரிப்பு வீதம் குறைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.