Home இந்தியா தஞ்சையில் கடத்தப்பட்ட சிசு பாதுகாப்பாக மீட்பு

தஞ்சையில் கடத்தப்பட்ட சிசு பாதுகாப்பாக மீட்பு

by Jey

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ராஜலட்சுமி (22). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ராஜலட்சுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 4-ந் தேதி தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 5-ந் தேதி காலை பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் மாடிப்பகுதியில் உள்ள வார்டில் ஒரு பெண் தனது உறவினரை பிரசவத்திற்கு அனுமதித்ததாக கூறி ராஜலட்சுமியிடம் பழகி உள்ளார். 4 நாட்களாக ராஜலட்சுமியிடம் உதவுவது போல நடித்த அப்பெண், நேற்று குழந்தையை கடத்திச்சென்றார்.

இதை அறிந்த குழந்தையின் பெற்றோர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தை கட்டப்பையில் வைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது.

தனிப்படை அமைத்த போலீசார், குழந்தையை கடத்தி சென்ற அந்த பெண்ணை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், கடத்தப்பட்ட பெண் குழந்தையை பட்டுக்கோட்டையில் போலீசார் மீட்டனர். சிசிடிவி ஆதாரங்களை கொண்டு போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர்.

related posts