றொரன்டோவைச் சேர்ந்த ரெப் இசைக் கலைஞர் Hassan Ali அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் குறித்த ரெப் இசைக் கலைஞர் அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸில் வைத்து செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 20 வயதான கறுப்பினத்தைச் சேர்ந்த Hashim Omar Hashi மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்காக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி ஹாஷீ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் முன்னதாக இரண்டு பேர் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
என்ன காரணத்திற்காக இந்த நபர் கொலை செய்யப்பட்டார் என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
கொலையுண்ட நபர் எந்தவொரு குற்றச் செயல்களுடனும் தொடர்புபடவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.