புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தினர் சீனாவின் பக்கம் திரும்பியுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய புலனாய்வுப் பிரிவின் அறிக்கையொன்றை தி இந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவினால் தீர்வுத் திட்டமொன்றை வழங்க முடியாது என புலம்பெயர் தமிழர்கள் கருதுவதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக இலங்கையில், இந்தியாவின் செல்வாக்கு வலுவிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா தமிழர்களின் நலன்களை உறுதி செய்யத் தவறியமையினால் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சீனாவின் உதவியை நாட முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் லண்டனில் நடைபெற்ற புலம்பெயர் சமூகத்தினரிடையேயான கூட்டமொன்றில் இந்த விடயங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்தால் அது தமிழர்களின் நலன்களை பாதிக்கும் என புலம்பெயர் தமிழர்கள் கருதுவதாகவும் இதனால் சீனாவுடன் ஆரோக்கியமான தொடர்புகளை பேணுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்திய புலானய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு சீனாவுடன் எந்த அடிப்படையிலாவது தொடர்பு பெண வேண்டுமென புலம்பெயர் தமிழ் சமூகம் கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன புத்திஜீவிகளின் ஊடாக தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சர்வதேச அளவிலான முனைப்புக்களை முன்னெடுக்க புலம்பெயர் தமிழ் சமூகம் யோசனைகனை முன்மொழிந்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.