இந்தியா இந்து தேசமாகவே இருக்கும் என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு பாஜக பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கூறுகையில், இந்தியா இந்து தேசமாக இருந்தது, இந்து தேசமாக இருந்து வருகிறது. இந்தியா இந்து தேசமாகவே இருக்கும். முன்னதாக காங்கிரஸ் சிறுபான்மையினரை திருப்திபடுத்தி வந்தது. ஆனால், தற்போது இந்துக்கள் ஒற்றிணைந்துவிட்டனர் என்று அவர்கள் தெரிந்துகொண்டனர். ஆகையால், தற்போது அவர்கள் (காங்கிரஸ்) துர்கா பூஜை செய்கின்றனர், கோவில்களுக்கு செல்கின்றனர். நீங்கள் இந்துவாக இருந்தால் இதை தேர்தலுக்காக செய்யாதீர்கள்… தினமும் செய்யுங்கள்’ என்றார்.