Home கனடா குளிர்காலத்தில் சளிக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை

குளிர்காலத்தில் சளிக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை

by Jey

இந்த குளிர்காலத்தில் சளிக் சாய்ச்சல் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த குளிர்காலத்தில் முடக்க நிலைமைகள் மற்றும் பொதுச் சுகாதார வழிகாட்டல்கள் காரணமாக சளிக்காய்ச்சல் தொற்று பெரிதாக பரவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த ஆண்டில் மீண்டும் சளிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டில் 79 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் பதிவாகியதாகவும், அதற்கு முந்தைய ஆண்டில் 54000 நோயாளிகள் பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டில் சளிக்காய்ச்சல் நோயாளிகளில் அதிகரிப்பு பதிவாகும் என தொற்று நோய் தடுப்பு நிபுணத்துவ மருத்துவர் Gerald Evans தெரிவித்துள்ளார்.

related posts