கனடாவில் (Canada) பிரிட்டிஷ் கொலம்பியாவில் (British Columbia) நடந்த ஒரு சம்பவம் கடவுளின் ஆசி இருந்தால், பயங்கரமான ஆபத்தில் இருந்தும் தப்பி விடலாம் என்பதை நிரூபித்துள்ளது. கடவுளின் அனுமதி இல்லாமல் கொல்ல முடியாது என்று கூறுவது நிச்சயம் உண்மைதான்.
கனடாவில் ஒரு பெண் தன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று விண்வெளியில் இருந்து ஒரு விண்கல் (Meteor) அவளது வீட்டின் கூரையில் விழுந்தது. இந்த விண்கல் வீட்டின் கூரையை துளைத்து அந்த பெண்ணின் படுக்கையில் அவருக்கு மிக அருகில் வைத்திருந்த தலையணை மீது விழுந்தது. இந்த விண்கல் பெண்ணிடம் இருந்து சில அங்குல தூரத்தில் விழுந்ததால், அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் ரூத் ஹாமில்டன், திடீரென பயங்கர சத்தம் மற்றும் புகை வாசனை காரணமாக விழித்துக் கொண்டார். இந்த சம்பவம் அக்டோபர் 4 இரவு நடந்தது என்று கூறப்படுகிறது. ஹாமில்டன் விக்டோரியா நியூஸிடம் இது குறித்து கூறுகையில், ‘நான் திடீரென்று பெரிய சத்தம் கேட்டு எழுந்து லைட்டை ஆன் செய்தேன். என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு முன் ஒரு இரவில், லூயிஸ் ஏரி அருகே விண்கற்கள் விழுந்ததை மக்கள் பார்த்தனர்’ என்றார்.