சிரிய முகாம்களில் உள்ள கனேடியர்களை மீட்குமாறு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பேணிய 26 கனேடியர்கள் சிரிய அகதி முகாம்களில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தங்கியுள்ள அகதிகளை மீள அழைத்து வருமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமஷ்டி நீதிமன்ற சட்டம், குடியுரிமை சட்டம் மற்றும் சர்வதேச பிரகடனங்களை மீறிச் செயற்படுவதாக இந்த மனுவில் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த கனேடியர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருவதில் எந்த சிக்கல்களும் கிடையாது என மனுவைத் தாக்கல் செய்த சட்டத்தரணி தெரிவிக்கின்றார்.
Lawrence Greenspon என்ற சட்டத்தரணியே இவ்வாறு அகதிகள் சார்பில் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.