தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் ஆரம்பமான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல இடங்களில் தொழில்நுட்பக் கோளாறு, மோதல், வாக்குப்பேட்டி பிரச்சனை உட்பட சில காரணங்களால் வாக்கு எண்ணிக்கை வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடேன் 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே திமுக தலைமையிலான கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.அதிமுக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இதுவரை நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் வாக்குப் பெட்டியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு 20-ம் தேதி நடைபெறும்.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட சிலர் வென்றுள்ளனர்