கனடாவில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதாரப் பணியாளர்களின் தட்டுப்பாடு தடுப்பூசி ஏற்றுகை உள்ளிட்ட கோவிட் ஒழிப்பு நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்களில் ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.
இவ்வாறு ஆளணி வளப் பற்றாக்குறை தற்பொழுது பணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மேலதிய சுமையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையினால் சத்திர சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.