கனேடியர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பொருளியலுக்கான நோபள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் Guelph பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட 65 வயதான டேவிட் கார்ட் என்பவருக்கு நோபள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் கார்ட், ஜொஸ்வா ஆங்கிரிஸ்ட் மற்றும் அமரர் எலன் குருக்னர் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சம்பளம் தொடர்பிலான ஆய்வு நடாத்தியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்றிருந்த ஆய்வாளர் எலன் குருக்னர் கடந்த 2019ம் ஆண்டில் காலமாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.