ஒன்றாரியோ மாகாணத்தில் மிக நீண்ட இடைவெளியின் பின்னர் குறைந்தளவு கோவிட் நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இன்றைய தினம் மாகாணத்தில் வெறும் 306 நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாத ஆரம்பத்தின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு நோய்த் தொற்று உறுதியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளனர்.
திங்கட்கிழமை 458 பேரும், செய்வாய்க்கிழமை 390 பேரும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய நாட்களாக ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் தொற்று உறுதியாளர் சராசரி எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.