Home கனடா முகநூல் உளச்சுகாதாரத்தை பாதிப்பதாக கனேடியர்கள் கருதுகின்றனர்

முகநூல் உளச்சுகாதாரத்தை பாதிப்பதாக கனேடியர்கள் கருதுகின்றனர்

by Jey

முகநூல் உளச்சுகாதாரத்தை பாதிப்பதாக அநேகமான கனேடியர்கள் கருதுகின்றனர் என அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

Leger and the Association for Canadian Studies நிறுவனத்தினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனம் குரோத பேச்சுக்களை பூதாகாரமாக்குகின்றது என பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக போலிச் செய்திகளை பரப்ப இது உதவும் இதனால் உளச் சுகாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முகநூல் காரணமாக உளச்சுகாதாரம் பாதிக்கப்படுகின்றது என ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும், முகநூல் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகளை பேணுவதற்கு வழியமைப்பதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

related posts