கோவிட் தடுப்பூசி சான்றிதழ் இன்றி மிருகக் காட்சிசாலை செல்ல முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மிருகக் காட்சிசாலை நிர்வாகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
12 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே மிருகக் காட்சிசாலைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.
விருந்தினர்கள், வர்த்தக பங்குதாரர்கள், பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
மிருகங்களையும், விருந்தினர்களையும், பணியாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு தடுப்பூசி சான்றிதழை கட்டாயப்படுத்தியுள்ளதாக மிருகக் காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.