புதிய இராணுவத் தளபதி நியமனத்தில் சர்ச்சை நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய இராணுவத் தளபதியாக Lt.-Gen. Trevor Cadieu ஐ நியமிப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ட்ரவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு காரணமாக அவரை பதவியில் அமர்த்துவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 7ம் திகதி ட்ரவரை இராணுவத் தளபதியாக நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் ட்ரவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தில் கடமையாற்றிய பெண் சிப்பாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தாம் எந்தவொரு குற்றத்தையும் இழைக்கவில்லை Lt.-Gen. Trevor Cadieu என தெரிவித்துள்ளார்.