றொரன்டோ பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் N95 முகக் கவசம் அணிந்தமைக்காக பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
பாடசாலை சபைகளினால் வழங்கப்படும் சேர்ஜிகல் முகக் கவசங்களை அணியாது N95 முகக் கவசம் அணிந்தார் என ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர் சம்பளமற்ற அடிப்படையில் பணி இடைநிறுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இவ்வாறு N95 முகக் கவசம் அணிந்த மேலும் சில ஆசிரியர்களும் எச்சரிக்கப்பட்டதாகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
குடும்ப சுமை காரணமாக விருப்பமின்றியும் குறித்த வகை சேர்ஜிகல் முகக் கவசங்களை அணிய நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வழங்கப்படும் முகக் கவசங்கள் போதியளவு பாதுகாப்பானது என பாடசாலை சபைகள் தெரிவிக்கின்றன.