உலகில் கனேடியர்கள் அதிகளவில் சக்தி வளத்தைப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த பத்து ஆண்டுகளிலும் இந்த நிலைமை நீடிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
The International Energy Agency என்ற நிறுவனம் இந்த எதிர்வுகூறலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் கனேடியர்கள் சராசரியாக 300 கிகாஜூல்களை சக்தி வளமாக பயன்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இது உலகில் சராசரியாக தனிநபர்கள் பயன்படுத்தும் சக்தி வளத்திலும் மும்மடங்காகும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கர்களை விடவும் கனேடியர்கள் அதிகளவில் சக்தி வளத்தைப் பயன்படுத்துகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.