பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
றொரன்டோவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடாத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காப்ரோவின் தென்மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்தேக நபர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.