கனடாவில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளும் நோக்கில் அலுவலகம் வரும் நபர்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளது.
பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னதாக ஓரு ஆண்டில் கனடாவில் சுமார் 2.3 மில்லியன் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டன.
எனினும், அதன் பின்னரான ஓராண்டு காலப் பகுதியில் மொத்தமாக 363255 பேருக்கே கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் இதுவரையில் 467541 பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளில் கோவிட் பெருந்தொற்று ஆபத்து குறையாத காரணத்தினால் அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்குமாறு அரசாங்கம் தொடர்ந்தும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.