Barrie நகரத்தைச் சேர்ந்த 42 வயது நபர் பிரதீபன் சிவராசா. கொரோனா பரவல் காரணமாக அவர் செய்து வந்த தொழில் மொத்தமாக பாதித்திருக்கிறது.
இந்நிலையில் Lotto Max என்ற லாட்டரியில் இவருக்கு $5,00,000 பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இது, இலங்கை மதிப்பில் சுமார் ஒன்பது கோடி ஆகும்.
இதுகுறித்து பிரதீபன் தெரிவித்துள்ளதாவது,
“கொரோனோ சமயத்தில் என் பணியாளர்கள் வருவாயின்றி தவிப்பதை நான் விரும்பவில்லை. எனவே என் பணத்தில் அவர்களுக்கு தேவையான உதவியை செய்து வந்தேன். இந்த லாட்டரி மூலம் கிடைத்த பணத்தை என் தொழிலில் முதலீடு செய்வேன். இவ்வளவு தொகைக்கான காசோலை எனக்கு தான் என்பதை உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.