கலப்பு தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்ட கனேடியர்களுக்கும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பயணிகளுக்கு தனது எல்லைகளை எதிர்வரும் 8ம் திகதி திறப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கலப்பு தடுப்பூசிகள் ஏற்றிக் கொள்ள அனுமதியில்லை என்ற போதிலும் சில நாடுகளில் அவ்வாறு ஏற்றிக் கொள்ளப்படுவதாக அமெரிக்காவின் நோய் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
கனடாவில் கலப்பு தடுப்பூசி முறைமை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பைசர், அஸ்ட்ராசென்கா மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகள் கலவையாக இவ்வாறு ஏற்றப்படுகின்றது.
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் கலப்பு தடுப்பூசியையே ஏற்றிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.