கனேடிய வதிவிடப்பாடசாலைகளில் மேலும் சிறார்கள் உயிரிழந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
வடக்கு மானிடோபாவின் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சிறார்கள் பலர் இவ்வாறு உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக 30 சிறார்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், புதிய சான்றுகளின் பிரகாரம் 1912 முதல் 1967 வரையிலான காலப் பகுதியில் 84 சிறார்கள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சிறுவர்கள் உயிரிழந்த விபரங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
கத்தோலிக்க வதிவிடப் பாடசாலைகளில் பழங்குடியின சிறார்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதாகவம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய ஆதாரங்கள் மேலும் சர்ச்சையை பூதாகாரமாக்கியுள்ளது.