பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்றைய தினம் காம்ப்லூப்ஸிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
காம்ப்லூப்ஸில் அண்மையில் 200 அடையாளப்படுத்தப்படா புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.
இந்த புதைகுழிகள் வதிவிடப் பாடசாலைகளில் கற்ற பழங்குடியின சிறார்களினதும் புதைகுழிகள் என நம்பப்படுகின்றது.
இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க தினத்தில் பிரதமர் பங்கேற்காமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் பிரதமர் ட்ரூடோ இன்று காம்ப்லூப்ஸிற்கு விஜயம் செய்ய உள்ளார்.