ராமகிருஷ்ணா மடத்தின் மூத்த மடாதிபதி சுவாமி அமியானந்தஜி மஹராஜ் காலமானார். அவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு 90 வயது ஆகிறது.
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்க்கை அவரை பின்தொடரும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் ஜெயராம்பதி மையத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர்.இன்று மாலை 3.30-5.30 மணி வரை பேலூர் மடத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். இன்று இரவு 9 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.