Home உலகம் மறைந்த கொலின் பவல் மீது ஈராக் மக்கள் சீற்றம்

மறைந்த கொலின் பவல் மீது ஈராக் மக்கள் சீற்றம்

by Jey

அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவல் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கு அவர் காரணம் அவர் பொய் சொன்னார் என ஈராக்கிய மக்கள்குற்றம்சாட்டியுள்ளனர்.
கொலின் பவலின் மரணம் குறித்த செய்திகள் ஈராக்கில் அவர் குறித்த சீற்றத்தினை மீண்டும் கிளறியுள்ளது.
பல ஈராக்கியர்கள் ஈராக் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக பாதுகாப்பு சபையில் பொய்சொன்னவர் கொலின் பவல் என கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஈராக் மிகப்பெருமளவு உயிரிழப்புகளை எதிர்கொள்வதற்கு கொலின்பவல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தெரிவித்த பொய்யே காரணம் என ஈராக் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர் பொய்சொன்னார் பொய் சொன்னார் என தெரிவித்துள்ளார் இரண்டு பிள்ளைகளின் தாயும் எழுத்தாளருமான 51 வயதுமரியம் -அவரது பிள்ளைகளில் ஒருவர் அமெரிக்காவில் கல்வி கற்பதால் அவர் தனது முழுமையான பெயரை வெளியிடவில்லை.
அவர் பொய் சொன்னார் நாங்கள் முடிவடையாத யுத்தத்தில் சிக்குண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈராக் இராணுவம் குவைத்தை ஆக்கிரமித்தவேளை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை முப்படைகளின் பிரதானி என்ற அடிப்படையில் கொலின் பவல் மேற்பாhர்வை செய்தார்.
எனினும் ஈராக்கில் பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் உள்ளன என தெரிவித்து பாதுகாப்பு சபையில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி அவர் உரையாற்றியதையே ஈராக் மக்கள் நினைவில் வைத்துள்ளனர்.
பாதுகாப்பு சபையில் அவர் ஈராக்கிடம் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் உள்ளன என்பதற்கு ஆதாரமாக பல புகைப்படங்கள் ஆவணங்களை வெளியிட்டு வாதிட்டிருந்தார்.
அன்திராக்ஸ் அடங்கிய குப்பியொன்றை காண்பித்த கொலின்பவல் இதுபோன்ற மிகப்பெருமளவு டீஸ்பூன் ஆபத்தான இரசாயன ஆயுதங்கள் ஈராக்கிடம் உள்ளன என குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை –
ஈராக்கில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக விசாரணையை எதிர்கொள்ளாமல் அவர் உயிரிழந்துள்ளமை குறித்து கவலையடைகின்றேன்,ஆனால் கடவுள் அவருக்காக காத்திருப்பார் என 2008 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபில்யூ புஷ்ஷின் மீது தனது காலணியை எறிந்த பத்திரிகையாளர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2011 இல் கொலின்பவல் தனது தவறான புலனாய்வு தகவல்களால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு இடம்பெற்றமை குறித்து கவலையடைவதாக அல்ஜசீராவிற்கு தெரிவித்திருந்தார்.
அதனை தனது தொழில்வாழ்க்கையில் ஏற்பட்ட கரை என வர்ணித்திருந்த அவர் அமெரிக்க புலனாய்வு தகவல்கள் பல தவறானவையாகிவிட்டன என குறிப்பிட்டிருந்தார்.

related posts