எட்மோன்டன் மற்றும் கல்கரி ஆகிய நகரங்களில் புதிய மேயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அல்பர்ட்டா மாகாணத்தின் முக்கிய நகரங்கள் இரண்டில் மேயர் பதவிக்காக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
கல்கரி நகரின் முதல் பெண் மேயராக Jyoti Gondek தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று எட்மோன்டன் நகரில் முதல் தடவையாக தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சீக்கியரான Amarjeet Sohi நகரின் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளர்ர்.
எட்மோன்டன் நகரின் மேயராக தெரிவாகியுள்ள Amarjeet Sohi அமைச்சரவை அமைச்சராக கடமையாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்கரி, நகரின் மேயராக இதுவரையில் பதவி வகித்த Naheed Nenshi ஐ Jyoti Gondek பதிலீடு செய்ய உள்ளார்.
ஜனநாயக ரீதியில் மக்கள் தமக்கு அளித்த ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும் சிறந்த சேவையை ஆற்ற உள்ளதாகவும் கொன்டாக் தெரிவித்துள்ளார்.