Home கனடா ஒன்றாரியோ முதல்வரின் பிரிவிணைவாத கருத்துக்கு எதிர்ப்பு

ஒன்றாரியோ முதல்வரின் பிரிவிணைவாத கருத்துக்கு எதிர்ப்பு

by Jey

ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்டின் பிரிவிணைவாத கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

குடியேறிகள் மாகாணத்திற்குள் பிரவேசிப்பது தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலையில்லாமல் அரசாங்க நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கு இடமில்லை என போர்ட் கருத்து வெளியிட்டிருந்தார்.

Collecting the dole என்ற வசனத்தை போர்ட் பயன்படுத்தியிருந்தார்.

இந்த வார்த்தையானது வேலையின்மையை காரணமாகக் கொண்டு நிதிக் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதனை குறிக்கின்றது.

மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் குடியேறிகளை இழிவுபடுத்தும் வகையிலும் பிரிவிணைப்படுத்தும் வகையிலும் போர்ட் வெளியிட்ட கருத்து கண்டிக்கப்பட வேண்டியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக முதல்வர் போர்ட் இந்த வார்த்தை பிரயோகத்திற்காக மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

related posts