Home இலங்கை இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்

இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்

by Jey

நாட்டுக்கு பெரும் பலத்தைத் தரும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் உள்ளதாகவும், இளைஞர்களை பாஸ்போர்ட் வரிசையில் இழுத்து இளைஞர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க இருக்கும் இளைஞர் சமுதாயம் ஏமாற்றமடைந்து, அவர்களது எதிர்காலம் கேள்விக் குறியானால் இந்நாடு என்னவாகும்எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பிற்பகல் அன்னாசி விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய தொம்பே கிரிந்திவெல விவசாயிகளை சந்தித்தார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

 

” எவருக்கும் தீங்கு விளைவிக்காமல் தமது பலத்தால் இந்த நாட்டிற்கு உணவு வழங்கிய விவசாயிகளை, அரசாங்கம் படுகுழிக்குள் தள்ளியுள்ளது.

விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்தால் இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் இன்று பெருமை பேசினாலும், குறைந்தபட்சம் பல மாதங்களாக தெருவில் நிற்கும் ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க நிதியை ஒதுக்க ஒதுக்கவில்லை.

 

இப்படியான அரசாங்கம், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பதில்களை வழங்கி அவர்களது பயிர்ச் செய்கைகளுக்கு இழப்பீடுகளை எவ்வாறு வழங்க முடியும்? ” – எனவும் சஜித் கேள்வி எழுப்பியுள்ளார்.

related posts