வதிவிடப்பாடசாலைகள் குறித்த தகவல்கள் சரியானவை கிடையாது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க தேசிய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் துல்லியமானவை கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
காம்ப்லூப்ஸ் வதிவிடப்பாடசாலை உள்ளிட்ட பல்வேறு வதிவிடப்பாடசாலைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த புள்ளிவிபரத் தகவல்களில் தமக்கு உடன்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ள்ளார்.
காம்ப்லூப்ஸில் அடையாளமிடப்படாத 215 புதைகுழிகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்த்து.
இந்த புதைகுழிகளில் வதிவிடப்பாடசாலைகளில் கற்ற சிறார்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வதிவிடப்பாடசாலை சிறார்கள் தொடர்பில் சரியான புள்ளிவிபரத் தகவல்கள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை எனவும், சில தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.