குடியேறிகள் பற்றிய கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாது என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
வேலையற்றவர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் குடியேறிகள் கனடா வரக்கூடாது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
குடியேறிகளை அந்நியப்படுத்தும் வகையில் பிரிவிணைவாத கருத்துக்களை முதல்வர் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.
இந்த பிரிவிணைவாத கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அதற்காக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் கோரியிருந்தன.
எவ்வாறெனினும் தாம் மன்னிப்பு கோரப் போவதில்லை என முதல்வர் தெரிவித்துள்ளார்.
கடின உழைப்பைத் தரக்கூடிய குடியேறிகளை தாம் ஒன்றோரியோவிற்கு வரவேற்பதாக முதல்வர் போர்ட் தெரிவித்துள்ளார்.