Home உலகம் IMF முக்கிய பதவியிலிருந்து விலகும் இந்திய பெண்

IMF முக்கிய பதவியிலிருந்து விலகும் இந்திய பெண்

by Jey

ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சேர்ந்த கீதா கோபிநாத் கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியேற்றார். அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் கர்நாடகத்தின் மைசூரில் பிறந்தவர். இவர் சர்வதேச நாணய நிதியத்தின் 11-வது தலைமைப் பொருளியல் வல்லுநராக பொறுப்பேற்றவர் ஆவார். கீதா கோபிநாத் இந்தப் பதவிக்கு வந்துள்ள முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக சேர்வதற்கு முன்பு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வு மற்றும் பொருளாதார பேராசிரியராக கீதா கோபிநாத் பணியாற்றி வந்தார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் அதன் மதிப்புமிக்க பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருக்கும் 3-வது பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கீதா கோபிநாத்துக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அளித்துவந்த விடுமுறை முடிவடைய உள்ளது. இதனால் அவர் நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகி, வரும் ஜனவரி மாதம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் மீண்டும் இணைய உள்ளார்.

இதுகுறித்து சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா கூறுகையில், “சர்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைவரான கீதா, பெருந்தொற்றின்போது விமர்சன பகுப்பாய்வை எழுதி வரலாறு படைத்தார். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைக் கையாண்டதில் அவருடைய கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் திட்டமிடல் மிகவும் பாராட்டுக்குரியது.

கொரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய தடுப்பூசி இலக்குகளை நிர்ணயிப்பதில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது. காலநிலை மாற்றம் குறித்த கொள்கைகளை பகுப்பாய்வு செய்ய சர்வதேச நிதியத்துக்குள் ஒரு காலநிலை மாற்றக் குழுவை அமைக்க அவர் உதவி செய்தார்” என்று தெரிவித்துள்ளார்.

related posts