சுமார் ஒன்பது லட்சம் கனேடியர்கள் தொழில்களை இழக்கக்கூடிய அபாயத்தில் இருக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
உலக அளவில் சக்தி வளப்பயன்பாடு தொடர்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் அடிப்படையில் இந்த ஆபத்து காணப்படுகின்றது.
மீள்சுழற்சி செய்யக்கூடிய, சுற்றுச் சூழலுக்கு பாதகமில்லா சக்தி வள உற்பத்திகள் நோக்கிய நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் சில வகை தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில்களை இழக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தை அடிப்படையாக கொண்ட மாற்றங்கள் தொடர்பில் தொழில்துறையில் ஈடுபடுவோருக்கு போதியளவு தெளிவு வழங்கப்பட வேண்டுமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காலநிலைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய சக்தி வள உற்பத்திகள் கிரமமாக குறைவடையும் போது அந்த துறைகளில் தற்பொழுது பணியாற்றுவோருக்கு மாற்று வழிகள் சரியான முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.