றொரன்டோவில் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஊதியமற்ற விடுமுறை வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதிக்குள் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு இவ்வாறு ஊதியமற்ற விடுமுறை வழங்கப்பட உள்ளது.
நவம்பர் மாத இறுதிக்குள் முழு அளவில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக் கொள்ளத் தவறும் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது நெருக்கடி நிலைமை உருவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் மருத்துவ மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட உள்ளதாப தெரிவிக்கப்படுகின்றது.