பூஸ்டர் தடுப்பூசியாக பைஸரை போட்டுக்கொண்டால் 95.6 வீதம் பயனளிப்பதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையில் 10,000 பங்கேற்றனர்.
இதன் முடிவில் பூஸ்டர் தடுப்பூசி 95.6% பயனளிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு எதிரான முழுமையான பாதுகாப்பை இந்த பூஸ்டர் தடுப்பூசி வழங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனாவுக்கு எதிராக முழுமையான எதிர்ப்பைப் பெற பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு சில நாடுகள் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.