சஸ்கட்ச்வானில் கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்களப் பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதாக அமைச்சர் பில் பிளயர் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கனேடிய செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியையும் பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுச் சுகாதார கட்டமைப்பில் நிலவி வரும் அழுத்தங்களை வரையறுக்கும் நோக்கில் இவ்வாறு உதவிகள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.