Home கனடா 13 மில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தவில்லை

13 மில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தவில்லை

by Jey

கனடாவில் சுமார் பதின்மூன்று மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மில்லியன் கணக்கான பயன்படுத்தப்படா தடுப்பூசிகளை என்ன செய்வது என்பது குறித்து கனேடிய அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவின் மத்திய தடுப்பூசி களஞ்சிசாலையில் சுமார் 13 மில்லியன் கோவிட் தடுப்பூசிகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் மொத்த சனத்தொகையினருக்கும் எவ்வளவு அளவு தடுப்பூசிகள் தேவை என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா  டேம் தெரிவித்துளார்.

காலாவதியாகும் தருவாயில் காணப்படும் தடுப்பூசிகள் பற்றி விசேட கவனம் செலுத்தப்படும் அவர் தெரிவித்துள்ளார்.

related posts