காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக பா.ஜ.க. அரசை விமர்சித்துள்ளார்.
அந்த பதிவில், “பிரதமர் மோடியின் அரசு பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் விஷயத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதிக வேலையின்மை, அரசு சொத்துக்கள் விற்கப்படுவது, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை மோடி அரசில் ஏற்பட்டுள்ளதாகவும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.