நாட்டின் பணவீக்க நிலைமை குறித்து முன்னாள் கனேடிய பிரதமர் Jean Chretien தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.
கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவில் பணம் அச்சிடுவது தொடர்பில் அவர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கொள்கைகள் இல்லாது பணம் அச்சிடப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 4.4 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.