வதிவிடப் பாடசாலைகளில் சித்திரவதை சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரியவில்லை என முன்னாள் பிரதமர் ஜேன் செரிட்டின் தெரிவித்துள்ளார்.
தாம் இந்திய விவகார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இவ்வாறான எந்தவொரு சம்பவங்களும் தமக்கு பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1968ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரையில் அவர் அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.
வதிவிடப்பாடசாலைகளில் சிறுவர்கள் துனபுறுத்தப்பட்டதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
பழங்குடியின சிறார்கள் பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்பறுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வதிவிடப்பாடசாலைகள் இருப்பதாக அறிந்து கொண்ட போதிலும் அங்கு பாரியளவில் அநீதிகள் இழைக்கப்பட்டதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பற்றி தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.