உளச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடிய முயற்சியான்மையாளர் ஒருவர் நிதி உதவி வழங்கியுள்ளார்.
கனேடிய தொழில்நுட்பத்துறை முயற்சியான்மையாளர் சஞ்சய் சின்ஹால் என்பவரே இவ்வாறு நிதி உதவி வழங்கியுள்ளார்.
பய்பாலர் என்னும் உளச் சுகாதாரப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட சஞ்சய், இவ்வாறான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்து மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளார்.
உளச்சுகாதாரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமானது எனவும், தாம் தமது வள வயதில் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிரநோக்கியதாகத் தெரிவித்துள்ளார்.
றொரன்டோ சுகாதார வலையமைப்பு பல்கலைக்கழகத்தின் உளச்சுகாதார மேம்பாட்டு திட்டத்திற்கு இவ்வாறு உதவி வழங்கப்பட உள்ளது.
உளச்சுகாதாரம் பற்றிய ஆய்வுகளை நடாத்தி அது தொடர்பில் தீர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.