Home உலகம் 800 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட பிக்காசோவின் படைப்புக்கள்

800 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட பிக்காசோவின் படைப்புக்கள்

by Jey

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பெல்லாஜியோ கேலரி ஆஃப் ஃபைன் ஆர்ட்டில் உள்ள பிக்காசோ உணவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த பிக்காசோவின் ஒன்பது ஓவியங்கள் மற்றும் இரண்டு பீங்கான் துண்டுகளை அதன் உரிமையாளர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விற்க முடிவு செய்தார்.

புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபி லாஸ் வேகாசில் இந்த ஏலத்தை நடத்தியது. நேற்று முன்தினம் இந்த ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் 1938-ம் ஆண்டு வரையப்பட்ட பிக்காசோவின் காதலியான மேரி தெரேஸ் வால்டரின் உருவப்படம் மட்டும் சுமார் 550 கோடிக்கு ($ 40.5 மில்லியன்) விற்கப்பட்டதாக ஏல அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தமாக ஒன்பது ஓவியங்கள் மற்றும் இரண்டு பீங்கான் துண்டு என அவரது 11 கலைப்படைப்புகள் சுமார் 800 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இன்று பிக்காசோவின் 140 வது பிறந்தநாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

related posts