Home கனடா பெற்றோர் 10 பில்லியன் டொலருக்கு பிள்ளைகளுக்கு வீடு வாங்கிக் கொடுத்துள்ளனர்

பெற்றோர் 10 பில்லியன் டொலருக்கு பிள்ளைகளுக்கு வீடு வாங்கிக் கொடுத்துள்ளனர்

by Jey

கனேடிய பெற்றோர் பத்து பில்லியன் டொலர்களுக்கு தங்களது பிள்ளைகளுக்கு வீடுகள் வாங்கி கொடுத்துள்ளனர்.

கனடாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கனேடிய இம்பிரியல் வழங்கி இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

கனடாவில் வீடுகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துச் செல்வதாகவும் இதனால் வீடுகளை கொள்வனவு செய்யும் இயலுமை குறைவடைந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டில் வீடுகள் கொள்வனவு செய்வதற்காக பெற்றோர் சுமார் 10 பில்லியன் டொலர்களை பிள்ளைகளுக்கு வழங்கியுள்ளனர்.

இவ்வாறு வீடுகள் கொள்வனவு செய்தவர்களில் 30 வீதமான முதல் தடவை வீட்டு கொள்வனவார்களுக்கும், 9 வீதமான ஏற்கனவே வீடுகள் கொள்வனவு செய்தவர்களும் பெற்றோரின் உதவியுடன் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் தடவையாக வீடு கொள்வனவு செய்யும் பிள்ளைகளுக்கு சராசரியாக 82000 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெற்றோரின் உதவியுடன் வீடுகள் கொள்வனவு செய்தவர்களின் காரணமாக வருமான ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts