ஒன்றாரியோவில் விமானமொன்று அவசரமாக வீதியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் பகுதியின் 407ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஒற்றை என்ஜினைக் கொண்ட விமானமொன்று இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் அவசரமாக தரையிறக்க நேரிட்டதனால் நெடுஞ்சாலையின் மூன்று வீதிகள் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், பயணிகளுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டதா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.