Home உலகம் மண்ணுக்கு அடியில் இருந்த 2-ம் உலகப்போரின் வெடிகுண்டு

மண்ணுக்கு அடியில் இருந்த 2-ம் உலகப்போரின் வெடிகுண்டு

by Jey

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சாலமன் தீவுகள் நாட்டில் 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிக்காத குண்டுகள் பல பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன. இந்த நிலையில் சாலமன் தீவுகளின் தலைநகர் ஹோனியாராவை சேர்ந்த ஒரு தம்பதி நேற்று அதிகாலையில் தங்களின் 2 மகன்களுடன் வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.

அப்போது அவர்கள் மண்ணில் குழி தோண்டி விறகுகளை போட்டு நெருப்பை கொளுத்தி குளிர் காய்ந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவி மற்றும் மற்றொரு மகன் பலத்த காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதில் அந்த குடும்பம் குளிர் காய்வதற்காக நெருப்பு வைத்த இடத்தில் மண்ணுக்கு அடியில் இருந்த 2-ம் உலகப்போரின் வெடிகுண்டு வெடித்து சிதறியது தெரியவந்தது.

 

related posts