இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் உள்ள இந்த தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு அங்கீகார பட்டியலில் சேர்க்கக்கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. எனினும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் தரவுகளை நிபுணர் குழு கோரியுள்ளது.
இதனால், கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து இறுதி மதிப்பீடு செய்வதற்காக வரும் நவம்பர் 3 ஆம் தேதி நிபுணர்குழு கூட உள்ள