கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனை குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையிலான குழுவில், ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவாக இது செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆலோசனைக்குழு முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி & சமூக பாதுகாப்பிற்கு உதவிக்கு வகை செய்தல், குடியுரிமை & இலங்கைக்கு விரும்பி செல்லுதல் ஆகிய 3 அம்சங்களை உள்ளடக்கி செயல்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.