தடுப்பூசி சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டதாக ஒட்டாவா பாராமெடிக் பணியாளர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தனது பணியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் சான்றிதழில் மோசடி செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண தடுப்பூசி மையத்தில் இரண்டு மாத்திரை தடுப்பூசியையும் ஏற்றிக் கொண்டதாக போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார் என குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆவண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதான குறித்த நபர் நீதிமன்றின் முன்னிலையாகும் உறுதிமொழிக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.